நாட்டின் பாதுகாப்பை உறுதிப் படுத்துங்கள் – நாமல் கோரிக்கை
நாட்டின் பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொதுத் தேர்தல் தேசியரபட்டியல் உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று ஹட்டனில் நடைபெற்ற கட்சியின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் புலனாய்வுக் கட்டமைப்பு பொலீஸ் அமைப்பை பயன் படுத்துவதன் மூலம் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் பலப்படுத்துவதன் மூலம் சர்வதேச நிறுவனங்கள் தூதுவராலயங்கள் போன்றவற்றின் உதவிகளை பெற்று நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதியானது என மக்களுக்கு உணர்த்துவது அவசியமானது.
இது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தலையாக கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





