மின்சார வாகன விற்பனை – எலான் மஸ்கிற்கு அதிர்ச்சி கொடுத்த சீன நிறுவனம்

மின்சார வாகனங்கள் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சி முன்னணி நிறுவனமாக சீன நிறுவனமான byd 100 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகத்தில் அவா் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லாவால் தயாரிக்கப்படும் காா்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.
இதனிடையே, டெஸ்லாவுக்கு கடும் போட்டியாக சீன நிறுவனமான byd உருவெடுத்திருப்பதுடன் உலக அரங்கில் மாபெரும் மின்சார வாகன சந்திகளில் ஒன்றாக திகழும் சீனாவில் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சியுள்ளது.