இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – ஒருவர் பலி – 13 பேர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 138வது கிலோமீட்டர் எல்லைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, சிமெந்து ஏற்றிச் சென்ற லொரியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 13 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தின் ஓட்டுநர் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த நான்கு பேர் தங்காலை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தங்காலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களில் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஒரு சுற்றுலா வழிகாட்டியும் அடங்குவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான பேருந்தில் 12 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான ஒன்பது சுற்றுலாப் பயணிகள் சிகிச்சைக்காக பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மேலதிக சிகிச்சைக்காக தங்காலை ஆதார மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த சாரதியின் சடலம் பெலியத்த மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.