உலகக்கோப்பை தோல்வி வலியை குறைக்குமா என்று தெரியவில்லை – ரோஹித் கவலை
உலகக்கோப்பைக்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடவில்லை.
இதைத்தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு முன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரோஹித், “உலகக்கோப்பையில் நாங்கள் விளையாடிய விதத்தை மறப்பது மிகவும் கடினம், எங்கள் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. முதல் 10 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இறுதிப்போட்டியில் தோற்றோம். இப்படி ஒரு தோல்விக்கு பிறகு வெளியே வருவது கடினம், ஆனால் வெளியில் இருந்து எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. இது எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது என்று” கூறினார்.
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா சொன்ன பதில்..!
இங்கு வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும்:
‘நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து பல ஆண்டுகளாகிறது. இதுவரை இங்கு வெற்றி பெறவில்லை. இங்கு வெற்றி பெற்றால் அது பெரிய விஷயமாக இருக்கும். இந்த தொடரின் வெற்றி உலகக்கோப்பை தோல்வியின் வலியைப் போக்குமா..? என்று தெரியவில்லை, ஏனென்றால் உலகக்கோப்பையை இந்தத் தொடரை ஒப்பிடுவது கடினம். இங்கு வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு பெரிய ஒன்று தேவை. எங்களிடம் அனைத்து வகையான வீரர்களும் உள்ளனர். எதையும் பற்றி அதிகம் யோசிக்காமல் சுதந்திரமாக விளையாட வேண்டும் என கூறினார்.