வட அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற வழக்கில் கடந்த வாரம் புளோரிடாவில் உள்ள மியாமி நகர கோர்ட்டு டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

சட்டவிரோதமாக அரசு ரகசியங்களை எடுத்துச் சென்றுவிட்டு, அவற்றை அரசு மீண்டும் திரும்பப் பெறமுடியாத அளவுக்கு அழித்துவிட முயன்றார் என்பது உள்பட டிரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து இந்த வழக்கில் டிரம்ப் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று டிரம்ப் தனது 77வது பிறந்த நாளில், ரகசிய ஆவணங்கள் தொடர்பான விசாரணைக்காக மியாமி நகர கோர்ட்டில் ஆஜரானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான டிரம்பின் முன்னாள் உதவியாளர் வால்ட் நவுடாவும் கோர்ட்டில் ஆஜரானார். அவர்கள் இருவரையும் மியாமி நகர பொலிஸார் கைது செய்தனர்.

Trump is 'toast' if classified records case is proven, ex-attorney general  Barr says | GMA News Online

அவர்களது கை ரேகைகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டன. அதே சமயம் டிரம்ப் வகித்த உயர் பதவியை கருத்தில் கொண்டு அவருக்கு கை விலங்கு பூட்டப்படவில்லை. தொடர்ந்து நடந்த விசாரணையின் போது டிரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்க மறுத்து தான் குற்றமற்றவர் என வாதிட்டார். இதையடுத்து அரசு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, டிரம்ப் மற்றும் வால்ட் நவுடா ஆகிய இருவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி ஜாமீன் வழங்கி விடுவித்தார்.

பணம் இதையடுத்து, டிரம்ப் தனது முன்னாள் உதவியாளர் வால்ட் நவுடாவிடம் இந்த வழக்கு குறித்து நேடியாக ஆலோசனை நடத்த தடை விதித்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். முன்னதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!