இலங்கை

புதுக்குடியிருப்பை வந்தடைந்த திலீபனின் பவனி ஊர்தி …(Photos)

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் “திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் இன்று (19) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வந்தடைந்திருந்தது.

திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது புதுக்குடியிருப்பு சந்தியினை வந்தடைந்தது. பின்னர் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வோடு இன்றைய ஊர்திப் பவனியானது முல்லைத்தீவு நகர்பகுதியை நோக்கி நகர்கின்றது.

இந்நிலையில் பொத்துவில் பகுதியில் கடந்த 15ம் திகதி பயணத்தை ஆரம்பித்த இந்நினைவு ஊர்தியானது இறுதியில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவுத்தூபியை சென்றடையவுள்ளது.

இன்றையதினம் புதுக்குடியிருப்பை வந்தடைந்த ஐந்தாம் நாள் பேரணியானது முள்ளிவாய்க்கால், கொக்குளாய், கொக்குதொடுவாய் பகுதிகளின் ஊடாக நெடுங்கேணியை சென்றடைய இருக்கின்றது.

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு நேற்று திங்கட்கிழமை (18) உத்தரவு பிறத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்