ட்ரம்ப் ஜனாதிபதியானால் ஐரோப்பாவுக்கு காத்திருக்கும் ஆபத்து
உக்ரைனில் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடிக்கின்ற போரில் ஆளணி மற்றும் ஆயுதக் கையிருப்பு போன்றவற்றில் நலிவடைந்துவிட்டது.
இந்த நிலையில் உக்ரைனின் படைகளால் இனிமேல் தனித்து ரஷ்யாவை எதிர்கொள்ள முடியாது என்ற கட்டம் நெருங்கிவருவது தெரிவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தலில் அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்து டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வர நேர்ந்தால், அது ரஷ்யாவின் புட்டினுக்குச் சாதகமான சர்வதேச நிலைவரத்தை ஏற்படுத்தும்.
அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற அவர் அதன் பிறகு ஐரோப்பிய எல்லைகளை நோக்கிப் போரைத் தீவிரப்படுத்த முனையக் கூடும் என்று ஐரோப்பிய வல்லுநர்கள் நம்புகின்றனர்-
இவைபோன்ற பூகோள, களநிலை மாற்றங்களினால் ரஷ்யாவைத் தனித்து எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களைச் செய்ய வேண்டிய அவசரம் ஐரோப்பாவுக்கு ஏற்பட்டுள்ளது.