CT Match 11 – அரையிறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று கராச்சியில் தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பில் சால்ட், டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தது. டக்கெட் 24 ரன்னிலும், ஜோ ரூட் 37 ரன்னிலும், ஹாரி ப்ரூக் 19 ரன்னிலும், பட்லர் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து 38.2 ஓவரில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கோ யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மகாராஜ் 2 விக்கெட்டும் லுங்கி நிகிடி, ரபாடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
29.1 ஓவரில் 181 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுஸ்சன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா “பி” பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்துள்ளது.