செய்தி விளையாட்டு

அல்-நாசருடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ

உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.

இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைத்தளத்தில் “புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதே பேரார்வம், அதே கனவு. இணைந்து சதனைப் படைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐந்து முறை பலோன் டிஆர் விருது வென்ற ரொனால்டோ, கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணிக்கு சென்றார்.

இவருக்கு வருடத்திற்கு 20 கோடி அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி