சிங்கப்பூரை மீண்டும் அச்சுறுத்தும் கொவிட் தொற்று

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 14,200 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிகரிப்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், புதிய திரிபுகள் பரவுவதும் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LF.7 மற்றும் NB.1.8 எனப்படும் கொவிட்-19 திரிபுகள் அதிகளவில் பரவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளைப் பயன்படுத்துமாறும், விசேட பூஸ்டர் ஊசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 2 times, 2 visits today)