ஜெர்மனியில் வாகனம் செலுத்துவதற்கான சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தல்
ஜெர்மனியில் இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணிந்து வாகனம் செலுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.
ஜெர்மனியில் இஸ்லாமிய பெண்கள் முக்காடு அதாவது ஹிஜாப்பை அணிந்து வாகனத்தை ஓட்டுதல் ஜெர்மனியின் சட்டத்துக்கு புறம்பான ஒரு விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நோயஸ்சஸ்ட் என்ற பிரதேசத்துடைய நீதிமன்றமானது ஒரு வழக்கில் தனது தீர்ப்பை இவ்வாறு தெரிவித்து இருக்கின்றது.
அதாவது ஒரு இஸ்லாமிய பெண் அப்பிரதேசத்தில் உள்ள வாகன சாரதி அனுமதி பத்திர அலுவலகத்தில் தான் இவ்வாறு வாகனத்தை ஓட்டுவதற்கு குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் அணியும் முககவசமான ஹிஜாப்பை அணிந்து தான் வாகனத்தை ஓட்ட போவதாக வேண்டுதலை விடுத்து இருக்கின்றார்.
இந்நிலையில் இந்த நிர்வாகமானது இந்த விண்ணப்பத்தை ஏற்கவில்லை. அதனால் குறித்த பெண் நிர்வாக நீதிமன்றத்தை அனுகியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நிர்வாக நீதிமன்றமானது இந்த வழக்கை விசாரித்த பின் இவ்வாறு இந்த பெண்ணானவர் முககவசத்தை அணிந்து வாகனத்தை ஓட முடியாது என்று தனது தீர்ப்பில் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.
அதாவது ஏதேனும் குற்றவியல் சமபவங்களில் ஈடுப்பட்டால் இவ்வாறு முககவசத்தை அணிந்து வாகனத்தை ஓட்டினால் குற்றவாளிகளை இணங்கான முடியாது என்பதால் இதன் காரணத்தினால் நீதிமன்றம் இவ்வாறான ஓர் விதிவிலக்கை தாம் மேற்கொள்ள முடியாது என்று தனது தீர்ப்பில் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.