ஆசியா செய்தி

தொடர் நெருக்கடியில் சீனா – வளர்ப்பு பூனைகளுக்கு பரவும் கொரோனா தொற்று

சீனாவில் புதிய வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்றது.

இந்த நிலையில், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை அதற்கு கொடுத்து வருகின்றனர்.

எனினும் எப்.ஐ.பி., எனப்படும் பெலைன் இன்பெக்சியஸ் பெரிட்டோனிட்டிஸ் எனப்படும் இந்த தொற்று, பூனைகளிடம் இருந்து பூனைக்கு பரவுமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்படும் பூனைகள் உயிரிழக்கின்றன. உடனடி சிகிச்சை முறைகள் ஏதும் இல்லாத நிலையில், மனிதர்கள் கொரோனா தொற்றுக்கு பயன்படுத்திய மாத்திரைகளை பூனைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, மெர்க்ஸ் லேக்விரியோ எனும் நோய் தடுப்பு மருந்தை பூனைகளுக்கு கொடுத்து வருவது மக்களிடையே அதிகரித்துள்ளது.

பூனைகளுக்கான கொரோனா பாதிப்பு மற்றும் அதற்கு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து சீன மக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையே நடத்தி வருகின்றனர்.

‘மனிதர்கள் கொரோனாவுக்கு பயன்படுத்தும் மருந்துகளை என்னுடைய பூனைக்குட்டிக்கு கொடுத்தேன். அது நன்கு வேலை செய்தது. நீங்களும் இதனை செய்து உங்களின் பூனைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’, என்று பூனை வளர்ப்பாளர் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இது பற்றி மெர்க்ஸ் லேக்விரியோ மருந்து நிறுவனம் தரப்பில் கூறுகையில்,’இந்த மருந்துகள் பூனைகளுக்கு பயன்படுமா? என்பது குறித்து பரிசோதிக்கவில்லை. அந்த யோசனையும் எங்களிடம் இல்லை’, எனக் கூறியுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!