இலங்கையில் கிடைக்கும் இனிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள் கலக்கப்பட்டுள்ளது!

புற்றுநோயை உண்டாக்கும் E-951 என்ற இனிப்பான அஸ்பார்டாம் இலங்கையில் கிடைக்கும் இனிப்புகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் ரொஷான் குமார தெரிவித்தார்.
இது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த இனிப்பு வகைகள் சந்தையில் தற்போது பரவலாக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பச்சை நிற இனிப்பு பானங்கள் குறைந்த சர்க்கரை இனிப்பு பொருட்களில் இந்த இனிப்பு கலக்கப்பட்டிருந்தாகவும் ரொஷான் குமார கூறியுள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சாக்லேட், லாலிபாப் போன்ற சுவையூட்டும் உணவுகளிலும் இது கலந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)