பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கத்திற்கு கடும் பின்னடைவு!
பிரித்தானியாவில் பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கத்திற்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத புலம்பெயர்வோரை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் குறித்த வாக்கெடுப்பில் பெரும்பாலான சட்டமியற்றுவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதற்கு அமைச்சர்கள் மத்தியில் எதிர்பு காணப்பட்டாலும், குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ரிஷி சுனக் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இது அவருடைய அரசாங்கத்திற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. YouGov வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பின்படி. 70 வீதமான மக்கள் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான கருத்தையும் 21 வீதமானவர்கள் ஆதரவான கருத்தையும் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பொருள் ரிஷி சுனக்கின் நிகர சாதகமான மதிப்பீடு மைனஸ் 49 இல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 10 புள்ளி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.