நிதி நெருக்கடியில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் – அடுத்த நகர்வு என்ன?
உக்ரைனில் துருப்புக்களை நிலைநிறுத்த பிரித்தானிய அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு £28 பில்லியன் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்வதாக குறிப்பிடப்படுகிறது.
பிரிட்டனின் உயர்மட்ட இராணுவத் தலைவர், ரிச்சர்ட் நைட்டன் (Air Chief Marshal Sir Richard Knighton), , பாதுகாப்பு அமைச்சகத்தின் மதிப்பீட்டில் இப்போது முதல் 2030 வரை £28 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு இடம்பெற்ற ஒரு கூட்டத்தில், இது தொடர்பான மதிப்பீட்டை ரிச்சர்ட் நைட்டன் (Richard Knighton) பிரதமரிடம் சமர்பித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதிகரித்து வரும் உலகளாவிய பதற்றங்களுக்கு ஏற்ப பிரித்தானியா பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





