தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டி படுக்கொலை வழக்கு -நால்வர் கைது !
புறம்போக்கு இடத்தை மடக்கி விற்பதில் ஏற்பட்ட தகராரில் கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம்
சம்பவம் தொடர்பில், சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் வயது 33 .பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு புரட்டி பாரதம் நிர்வாகி ராஜா கொலை வழக்கு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதால் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார் .பாரதிய ஜனதா கட்சி பெருங்களத்தூர் மண்டல எஸ்சி அணி தலைவராகவும் பொறுப்பில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார் .இரவில் மைதானத்திற்கு அழைத்து வந்து ஒன்றாக பலர் மது அருந்தி விட்டு வெங்கேடஷ்னை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது.
மைதானத்தில் பாஜக பிரமுகர் பீரி வெங்கடேசன் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் இது குறித்து பீர்க்கன்காரனை காவல் ஆய்வாளர் நெடுமாறன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த பீரி வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
வெங்கடேஷ் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த குணா ,சதீஷ் குமார் ,சந்துரு,அருண் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் கடந்த மாதம்9ந்தேதி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அந்த மூன்று பேரும் சமீபத்தில் பெயிலில் வெளிவந்ததால் அவர்கள் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.மேலும் இவர்கள் கொலை செய்து விட்டு தாம்பரம் அருகே உள்ள காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று இந்த நான்கு நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களை மடக்கி விற்பதில் பாஜக நிர்வாகி வெங்கடேசுக்கும் கொலை செய்த நான்கு நபர்களுக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.மேலும் வெங்கடேஷ் மற்றும் நான்கு நபர்களும் புரட்சி பாரத கட்சி நிர்வாகி ராஜா கொலை வழக்கில் சம்பந்தம் உள்ளதால் இவர்கள் அனைவரும் நண்பர்களாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நான்கு நபர்களும் ஒன்று கூடி வெங்கடேசையை விட்டு வைத்தால் நம்மை கொலை செய்து விடுவான் என எண்ணி வெங்கடேசை நைசாக பேசி பெருங்களத்தூர் குட்வில் நகரில் உள்ள காலி மனைக்கு இரவு அழைத்துச் சென்று ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.ஒரு கட்டத்தில் அந்த பகுதியில் ஏற்கனவே அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை எடுத்து பாஜக நிர்வாகி வெங்கேஷ்சை முகம் கழுத்து பகுதியில் கொடூரமாக வெட்டி உள்ளனர்
இதில் வெங்கடேஷ் சம்பவத்தில் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பிறகு நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த பீர்க்கன்காரணை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்