அனைத்து X பயனர்களுக்கும் கட்டணம் வசூலிக்கும் திட்டம்

அனைத்து X பயனர்களுக்கும் மாதாந்திர கட்டணத்தை அறிமுகப்படுத்த அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் மூலம் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இப்போதும், X கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதில்லை, ஆனால் பயனர்கள் மாதம் 8 எட்டு செலுத்தி X பிரீமியத்தில் சேரும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த கட்டண முறையை தொடங்குவதற்கான குறிப்பிட்ட திகதியை அவர் இன்னும் அறிவிக்கவில்லை.
(Visited 20 times, 1 visits today)