இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்ட பைடன் – சிக்கிய ஆதாரம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வேண்டுமென்றே ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாகவும் அதன் விவரங்களை வெளியிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
எனினும் அவர்மீது வழக்குப் பதிவுசெய்யப்படாது என்று அரசாங்கச் சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
பைடன் அவரின் நினைவுக் குறிப்பிற்காக எழுத்தாளர் ஒருவரிடம் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாக அறிக்கை வெளியானது.
அறிக்கையைத் தயாரிப்பதற்காக நடத்தப்பட்ட பேட்டியில் பைடன் தம்மை நினைவாற்றல் குறைந்த ஒரு முதியவர் என்று குறிப்பிட்டார். அதையே அவர் வழக்கு விசாரணையிலும் சொல்லக்கூடும் என்று சிறப்பு வழக்கறிஞர் கூறினார்.
அதனால் பைடன்மீது குற்றச்சாட்டுப் பதிவுசெய்வது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பைடனுக்கு வயது 81ஆகும்.
2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையே, பைடனின் இல்லத்திலும் தனியார் அலுவலகத்திலும் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
345 பக்கங்கள் கொண்ட சிறப்பு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பைடன் உட்பட 147 பேர் பேட்டி காணப்பட்டனர்.
குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படாததை வரவேற்பதாக பைடன் கூறினார். தாம் புலனாய்வு அதிகாரிகளுடன் ஒத்துழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.