ஊடகவியலாளர்களின் கேள்விக்கு தடுமாற்றத்துடன் பதிலளித்த பைடன்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் செய்தியாளர்களின் கேள்விக்கு தடுமாற்றதுடன், பதிலளிப்பது அமெரிக்கர்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது.
அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) இல் நடைபெறவுள்ளது. இதற்காக பைடன் நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அவ்வாறு சிகாகோ சென்றிருந்த அவரிடம், உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் வாக்னர் படையினர், திடீரென மொஸ்கோவிற்கு எதிராக திரும்பினர். இதனால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பலவீனமடைந்துள்ளரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பைடன், ‘உண்மையில் சொல்வது கடினம். ஆனால் ஈராக்கில் நடந்த போரில் அவர் தோற்றுபோகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்தபோதும், உலகின் சிறந்த நட்பு நாடான சீனாவின் பிரதம மந்திரி என நரேந்திர மோடியை குறிப்பிட்டார். பின்னர் தனது தவறை அவர் சரிசெய்து கொண்டார்.
இந்த விடயங்கள் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.