வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நன்மை
2024 ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி இந்த விடயம் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜனவரி முதல் அக்டோபர் வரை பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணம் 5,431.54 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 11.7% அதிகரிப்பு என மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





