ஜெர்மனியில் விரைவில் அமுலாகும் தடை – மாணவர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஜெர்மனியில் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ள வன்முறைகள் காரணமாக சில பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான முதற்கட்டமாக, நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள பாடசாலைகளில் smart watch கைகடிகாரங்களை பாடசாலைக்கு அணிந்து வருவதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் smart watch மற்றும் smart phoneகளின் ஊடாக கருத்து பரிமாற்றம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாடசாலை நேரங்களில் smart watch மற்றும் smart phoneகளில் கவனம் செலுத்துவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு smart watch மற்றும் smart phoneகளை பாடசாலைகளுக்கு கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று கருத்து வெளியாகியுள்ளது.
(Visited 66 times, 1 visits today)