UKவில் சிக்னலில் காத்திருக்கும்போது தொலைபேசிகளை பார்க்க தடை : மீறினால் அபராதம்!
																																		பிரித்தானியாவில் சாலை விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ட்ராஃபிக்கில் சிக்கிக் கொள்ளும் போதோ அல்லது சந்திப்பில் காத்திருக்கும் போதோ தொலைபேசிகளை பார்ப்பவர்களுக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றத்தை இழைக்கும் நபருக்கு 2500 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்பதுடன், அவர்களின் உரிமம் இரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாதுகாப்பாக நிறுத்தப்படாமல்” மொபைல் போன் அல்லது சாட் நாவ் பயன்படுத்தினால், £1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனம் ஓட்டுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
மொபைல், சாட் நாவ், டேப்லெட் அல்லது தரவை அனுப்பும் அல்லது பெறக்கூடிய எந்தவொரு சாதனத்தையும் வாகனத்தை செலுத்தும்போது, அல்லது சிக்னலில் காத்திருக்கும்போது பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
        



                        
                            
