பொழுதுபோக்கு

அயோத்திக்கு வந்த “குழந்தை ராமர்”… உலகமே வியக்கும் சிலையின் சிறப்புகள் என்ன தெரியுமா?

அயோத்தி ராமர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலைஉலகிலேயே ஆகச்சிறந்த கலை வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் வெட்டி எடுக்கப்பட்ட பாறை, அயோத்தி கருவறைக்குள் நுழைந்ததன் பின்னணியை பார்க்கலாம்.

அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்பட்ட குழந்தை ராமர் சிலையின் புகைப்படம் வெளியான போதே அனைவரையும் கவர்ந்து இழுத்துவிட்டது.

ராமர், குழந்தையில் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்கிற அளவுக்கு, சாந்தமும் புன்னகையும் குடிகொண்டிருக்கும் வகையில், மிகவும் தத்ரூபமாக சிலை உருவாக்கப்பட்டிருந்ததுதான் அதற்கு காரணம்.

உண்மையில், 5 வயது பாலகனாக ராமரை நினைவுக்கூறும் வகையில், வெவ்வேறு இடங்களில் 3 சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த அருண் யோகிராஜ், பெங்களூருவைச் சேர்ந்த கணேஷ் பட் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த சத்யநாராயண் ஆகியோர் தனித்தனியாக சிலைகளை உருவாக்கியுள்ளனர்.

கர்நாடகாவில் உருவான 2 சிலைகளும் கருங்கல்லில் உருவானது. ராஜஸ்தானில் மார்பிள் கல்லை பயன்படுத்தி சிலை உருவாக்கப்பட்டது. இறுதியில் மைசூரில் உருவான சிலைதான் அயோத்தி கோயிலின் கருவறையை அடைந்துள்ளது.

தென்னிந்தியாவில் பெரும்பாலும் கடவுள் சிலைகளுக்கு நெல்லிக்கரு பாறைகளே பயன்படுத்தப்படுகின்றன. அதன் கருநீல நிறம் கிருஷ்ணரை நினைவூட்டுவதுடன், சூரிய ஒளியில் மின்னுவதால், கிருஷ்ண ஷிலா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், மைசூரு மாவட்ட குவாரியில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட 10 டன் எடைக் கொண்ட, 300 கோடி ஆண்டுகள் பழமையான ஒற்றை பாறையை வல்லுநர்கள் தேர்வு செய்தனர்.

அந்த பாறையில் தான், புன்னகை பூக்கிறது குழந்தை ராமர் சிலை. புகழ்பெற்ற கலைஞரான வாசுதேயோ காமத்தின் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு சிலை செதுக்கப்பட்டது.

உலகில் ராமரை கண்முன் நிறுத்தும் சிலைகளிலேயே மிகவும் கலை நுணுக்கத்தோடும் அவதாரங்களை உள்ளடக்கியும் செதுக்கப்பட்டது இதுதான் முதல் முறை எனப்படுகிறது.

சிலையை கூர்ந்து பார்ப்போருக்கு, சிலையின் இருப்பக்கத்திலும் மேல்புற வளைவில் பரசுராமர், ராமர், கிருஷ்ணர், கல்கி, வாமன, நரசிம்ம, கூர்ம, வராக, மச்ச, பலராம என கிருஷ்ணரின் 10 அவதாரங்களும் புலப்படும்.

சிலையின் வலது பக்கத்தில் ஹனுமனும், இடதுபக்கத்தில் விஷ்ணுவின் வாகனமான கருடனும் அமைந்துள்ளது. அத்துடன், சுவஸ்திக் மற்றும் ஓம் அடையாளம், கதாயுதம், சக்கரம், சங்கு உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களோடு, இடது கையில் வில் அம்பு தாங்கி, வலது கரத்தால் ஆசிர்வதித்தபடி தாமரை பீடத்தில் பக்தர்கள் மனதை கொள்ளை கொண்டபடி காட்சியளிக்கிறார் குழந்தை ராமர்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content