சிங்கப்பூருக்கு பணத்துடன் சென்ற 14 வெளிநாட்டவர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

சிங்கப்பூருக்கு 14 வெளிநாட்டவர்கள் உட்பட 200 பயணிகளுக்கு பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காரணம் கூற முடியாமல் பெருந்தொகை பணம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த வெளிநாட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்குள் நுழையும்போது அல்லது வெளியேறும்போது கையில் S$20,000 க்கு மேல் ரொக்கம் இருந்தால் அதை அதிகாரிகளிடம் முறையாக அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு அறிவிக்காததற்காக அல்லது தவறாக அறிவித்ததற்காக 14 வெளிநாட்டு பயணிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 26 முதல் 71 வயதுக்குட்பட்ட நான்கு பேர், $20,700 முதல் $380,139 வரையிலான பல்வேறு நாடுகளின் ரொக்கப் பணத்தை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்தபோது பிடிபட்டனர்.
கடந்த மே 21 முதல் மே 27 வரை நடந்த ஒரு வார கால நடவடிக்கையின் போது அவர்கள் அனைவரும் பிடிபட்டனர். அவர்கள் நிலம், கடல் மற்றும் வான் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்தவர்கள் என்பது கூடுதல் தகவலாகும்.