பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சர்ச்சைக்குரிய சொற்றொடரை தடை செய்யும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தை தொடர்ந்து “இன்டிஃபாடாவை உலகமயமாக்கு” என்ற சொற்றொடரை தடை செய்ய போண்டி கடற்கரை அமைந்துள்ள மாநிலம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் (NSW) பிரதமர் கிறிஸ் மின்ஸ் (Chris Minns), தாக்குதல் குறித்து விசாரணை செய்ய ஒரு ரோயல் கமிஷனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாக நம்பப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள், கடந்த ஞாயிற்றுக்கிழமை போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
கடுமையான வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அடுத்த வாரம் மாநில நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மின்ஸ் திட்டமிட்டுள்ளார்.
அத்துடன் “அமைதியான கோடைகாலத்தை” ஊக்குவிப்பதற்காக ஆர்ப்பாட்டங்களைக் குறைக்க எதிர்ப்புச் சட்டங்களை கடுமையாக்குவதாகவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.





