Asia Cup Final – இந்தியாவிற்கு எதிராக 146 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்ஹான் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்ஹான் அரைசதமடித்து அசத்தினார்.
அடுத்து வந்த வீரர்கள் இந்திய பந்து வீச்சிற்கு தடுமாறி குறைந்த ஓட்டங்களுக்கு அவுட் ஆகினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
(Visited 2 times, 1 visits today)