கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று (24) காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
நேற்று (23) கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.
இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4,000 வரையான பக்தர்களே வருகை தந்ததுடன் இந்திய பக்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை.
(Visited 11 times, 1 visits today)