இலங்கை – 4,800 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவு 4,800 மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி முதல் நேற்று (14.12) வரையான காலப்பகுதியில் இந்த அரிசி கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் திரு.சிவலி அருக்கொட தெரிவித்தார்.
அதில் 3,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியும், 1,800 மெற்றிக் தொன் வெள்ளை அரிசியும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரச இதர சட்டமூலக் கூட்டுத்தாபனத்தினால் ஆர்டர் செய்யப்பட்ட 52,000 மெற்றிக் தொன் அரிசியின் முதல் ஆர்டராக 5,200 மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச மற்றும் கூட்டுறவு அங்காடி வலையமைப்பின் ஊடாக இந்த அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது.