இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி பொதுத் தேர்தல் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும், ஜுன் 04 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
970 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள், அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்திய பாராளுமன்றத்தின் கீழ்சபைக்கு 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
(Visited 16 times, 1 visits today)