மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் அமெரிக்கா!
உக்ரைனில் அதன் இராணுவத் தலையீடு தொடர்பாக மாஸ்கோ மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ஒரு வருடத்திற்கும் மேலாக ரஷ்யாவிலிருந்து முதல் முறையாக அமெரிக்கா எண்ணெய் இறக்குமதியை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஸ்புட்னிக் குளோப் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் (EIA) கூற்றுப்படி, அமெரிக்கா அக்டோபர் மாதத்தில் 36,800 பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயையும், நவம்பரில் 9,900 பீப்பாய்களையும் முறையே $2.7 மில்லியன் மற்றும் $749,500 மதிப்பில் இறக்குமதி செய்தது.
பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவதை மேற்பார்வையிடும் அமெரிக்க கருவூலத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வழங்கிய குறிப்பிட்ட உரிமங்களால் இறக்குமதிகள் சாத்தியமானது.
2022ல் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ரஷ்யாவின் எண்ணெய்க்கு விலை உச்சவரம்பாக 60 டொலர்களை விதித்தன. ஆனால் அக்டோபரில் அந்த விலை $74 ஆகவும் நவம்பரில் $76 ஆகவும் பதிவாகியது.
இதனையடுத்து ரஷ்ய எண்ணெய்க்கான பிரீமியத்தை அமெரிக்கா செலுத்தியதாகவும் EIA தரவு வெளிப்படுத்தியுள்ளது.