நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸபந்தனா காலமானார்?
நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸபந்தனா திடீரென காலமானார் என்ற பொய்யான தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி அவர் நன்றாக இருப்பதாக உறுதிபடுத்தியுள்ளது. சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளது.
40 வயதான அவர், பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





