பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை!
நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள ஆப்கானிஸ்தான் பிரஜைகள் உள்ளிட்ட அனைவரும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியுடன் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இன்று (26.10) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து ஆவணமற்ற குடியேற்றவாசிகளையும் திருப்பியனுப்ப தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் (2023) 24 தற்கொலை குண்டுவெடிப்புகள், உட்பட இராணுவத்திற்கு எதிரான பல குற்றங்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசிடம் முழுமையான தரவு உள்ளது” என்று கூறிய புக்டி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் காலக்கெடுவிற்குள் தானாக முன்வந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.