இலங்கை

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி சென்ற இளைஞன் கைது

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.

கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கை அகதி ஒருவர் வந்திறங்கி இருப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து கடலோர போலீசார் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகு ஒன்றில் நடுக்கடல் மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கிஷோகரன் என்ற கிஷோர்(31) என்பவரை மீட்டனர்.

தொடர்ந்து மண்டபம் மறுவாழ்வு முகாமில் வைத்து கிஷோகரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அவர் இலங்கையில் பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு சிறை சென்றவர் என்றும் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக தமிழகம் வந்துள்ளதாகவும் மீண்டும் இலங்கை செல்ல முயற்சிகள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் பாஸ்போர்ட் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தனுஷ்கோடி போலீஸார் நேற்று(22) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்