போலி விசா அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்
இதேவேளை, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குறித்த பெண்ணுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.