இந்தியா

தெலுங்கானாவில் சக மாணவன் தாக்கியதால் கோமா நிலைக்குச் சென்ற மாணவன்! (வீடியோ)

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது, மாதிரி தேர்வுத்தாள்களை கேட்டும் கொடுக்காத ஆத்திரத்தில் சக மாணவன் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

ஹைதராபாத் சதர்காட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருபவர் சையத் ஆரிப். இவருடைய சக வகுப்பு மாணவனான கைஃப் தேர்வுக்கு படிக்க சில கேள்வி தாள்களைத் தரும்படி கேட்டுள்ளார்.

அப்போது தனக்கும் தான் தேர்வு இருக்கிறது. அதனால் தர முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கைஃப் சையத்தை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த சகா மாணவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர்.

கைஃப் தாக்கியதில் படுகாயமடைந்த சையத்தை மீட்ட சக மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது ஆரிப் கோமா நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சையத்தின் பெற்றோர் மற்றும் சகோதரி அளித்த புகாரில்,கல்லூரி வளாகத்தில் உள்ள CCTVயை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.அதில் சையத்தை கைஃப் தாக்கும் வீடியோ இருந்துள்ளது. இந்த வீடியோ தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/i/status/1700038528564875334

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!