இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலத்திற்கான விசேட பாதுகாப்பு திட்டம்

இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன் கீழ் தீவு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் ஏறக்குறைய 10,000 போக்குவரத்து உத்தியோகத்தர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மற்றும் கொழும்பு நரகையில் மாத்திரம் இந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேற்பட்டதாகும்.
இதேவேளை, புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவித்தார்.
மேலும், இந்த பண்டிகை காலத்தில், போலி ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடுவதால், நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(Visited 24 times, 1 visits today)