பிரான்ஸ் தலைநகரில் வீதியில் சென்ற நபருக்கு மர்ம நபர்கள் செய்த அதிர்ச்சி செயல்

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் 18 ஆம் வட்டாரத்தில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் வீதியில் நடந்து சென்ற குறித்த நபரை வழிமறித்த இரு கொள்ளையர்கள், குறித்த நபரை கத்தியால் தாக்கியுள்ளார். சரமாரியாக இந்த தாக்குதலில் அவர் நிலைகுலைந்து விழுந்தார்.
அவரிடம் இருந்த சில பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து இரு கொள்ளையர்களும் தப்பி ஓடியுள்ளனர்.
பின்னர் மருத்துவக்குழு அழைக்கப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் மேற்கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)