UK – எடின்பரோவில் வீதியில் கிடந்த துண்டிக்கப்பட்ட தலை : குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!
பிரித்தானியா – எடின்பரோவில் நபர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Cowgate பகுதியில் ஒரு பாதசாரி வாகனத்தில் மோதியதை பொலிசார் உறுதிப்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து துப்பறிவாளர்கள் தங்கள் விசாரணையைத் தொடர்ந்ததால், ஏராளமான அதிகாரிகள் கவுகேட்டில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் விவரிக்கும் சிலர் ஹாலோவீன் வார இறுதி என்பதால் சிலர் இவ்வாறு வடிவமைக்கப்பட்ட உருவத்தை வீசியிருக்கலாம் என நினைத்ததாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றிய தகல்களோ அல்லது கொலையாளி பற்றிய விவரங்களே இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





