Site icon Tamil News

சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் ரோபோ!

பொதுவாக நாம் சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் பழக்கம் கொண்ட அதிகமான மக்களை பார்த்துள்ளோம்.ஆனால் இது சற்று வித்தியாசமாக உள்ளது.

சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் வகையில்  ரோபோ ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர் .

புரோகிராம் செய்யப்பட்ட அந்த ரோபோ மனிதர்கள் உருவாக்கும் சமையல் வீடியோவை பார்த்து அது என்ன ரெசிப்பி என்பதை கண்டுபிடித்து அந்த உணவை தானே தயார் செய்து அசத்தியுள்ளது.

8 சாலட் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அந்த ரோபோவிடம் கொடுத்ததாகவும் அதனை படித்து அந்த 8 உணவுகளையும் சமைத்த ரோபோட்  அத்துடன்  தானே ஒரு புதிய உணவை தயாரித்துக் கொடுத்ததாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரோபோ  சமைக்கும் செயல் முறையை 93% சரியாக கண்டறியும் திறன் பெற்றுள்ளதாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version