இலங்கை ஆலயங்களில் நடைமுறைக்கும் வரும் புதியத் தடை
கதிர்காமம் ஆலயம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் இருந்து பெறப்படும் தங்கம், பணம் உள்ளிட்ட அனைத்தையும் பூசகர்களால் எடுத்து செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆலயங்களின் சகல பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் கீர்த்தி சிறிபத்தன தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் ஆலயத்தில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பூசகர்களை சேவையில் இணைக்கும் அதிகாரமும் பஸ்நாயக்க நிலமேக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.





