03 வருடங்களாக தலையில் ஐந்து அங்குள்ள கொம்புகளுடன் போராடி வாழ்ந்த நபர்!

ரஷ்யாவில் வாழ்ந்து வரும் நபர் ஒருவர் தலையில் கொம்புடன் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கடந்த 3 வருடங்களாக தலையில் கொம்புகளுடன் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த நபரின் தலையில் ஐந்து அங்குலம் நீளம் உள்ள கொம்பு ஒன்று வளர்ந்து வருகிறது.
பெயர் குறிப்பிடப்படாத 30 வயதான நோயாளி, குறித்த கொம்புடன் வாழும்போது கடுமையான வலியை அனுபவித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
பொது மயக்க மருந்தின் கீழ் அந்த பெரிய கொம்பு அவரின் தலையிலிருந்து வெட்டப்பட்டது, மேலும் புற்றுநோயை பரிசோதிக்க உடனடியாக அனுப்பப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)