இலங்கையில் அரிசி விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்கு பயனில்லை!
சந்தையில் அரிசி விலை உயர்ந்தாலும், பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கே நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பயிர் விற்பனையில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன கூறுகிறார்.
அதேபோன்று நெல் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் அரிசியின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என ‘ரத்னா’ அரிசி முதலாளி திரு.மித்ரபால லங்கேஸ்வரா குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)