October 22, 2025
Breaking News
Follow Us
இந்தியா

தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பொல குப்பம் ரோடு பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற பாடசாலை சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

”பாரதிதாசன் பேட்டையில் உள்ள அவரது வீட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான குடிநீர் டேங்க கில் தண்ணீர் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

இதன்போது தேவேந்திரன் மீது மின்சாரம் தாக்கியுளளது. சம்பவத்தை கண்ட தந்தை மாரி மகனை காப்பாற்ற சென்றபோது அவரம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அருகே இருந்தவர்கள் இருவரையும் . மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பள்ளி மாணவன் தேவேந்திரன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

பள்ளி முடித்து வீட்டிற்கு தேவையான தண்ணீரை பிடிப்பதற்காக சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது/.

மேலும் அரசு குடிநீர் டேங்கர் -யை சரிவர பராமரிக்கப்படாததால் தான் இந்த விபத்து நடைபெற்றதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேவேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே