இலங்கையில் சிறைதண்டனை அனுபவிப்பவர்கள் குறித்து வெளியான தகவல்!

போதைபொருள் பாவனை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 65 வீதமானவர்களே சிறைதண்டனை அனுபவித்து வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் 1000 முதல் 1500 வரையான சிறுவர்களும் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை போதைப் பொருளுக்கு எதிராக பொலிஸார் முன்னெடுத்துள்ள நீதி நடவடிக்கையின் கீழ் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)