இலங்கையில் கோர விபத்து! இளைஞர் பலி, நால்வர் காயம்
இரத்தினபுரி நகரில் கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கார் ஒன்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இளைஞர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களும், உயிரிழந்தவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களாவர்.
(Visited 14 times, 1 visits today)





