அமெரிக்காவில் விபத்துக்குள்ளான ஜெட் விமானம் – இருவர் பலி

புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர்.
விபத்திற்குள்ளான போது ஜெட் விமானத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது.
விமானி விபத்துக்கு சற்று முன்னர் கட்டுப்பாட்டு அறையிடம் கோரிக்கை விடுத்ததாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
(Visited 22 times, 1 visits today)