கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு!
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் (UNDP) அனுசரணையின் கீழ் திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்றும், இன்றும் (08-09) செயலமர்வு இடம் பெற்றது.
இச்செயலமர்வில் குற்றம் தொடர்பான அறிக்கையிடல், நிகழ்நிலை காப்பு பற்றிய சட்டமூலம் , போலி தகவல்களை பிரசுரித்தல் மற்றும் தொடர்புடைய சட்டங்கள், வெறுப்பு பேச்சு பற்றிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஊடக செயற்பாட்டின் போது கவனம் செலுத்த வேண்டிய தனி உரிமை பற்றிய சட்டப்பார்வை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இச்செயலமர்விற்கு ஊடக அமைச்சின் செயலாளர் வீ.பீ.கே அனூச பல்பிட்டிய. சுயாதீன ஊடக வலையமைப்பின் தலைவர் சுதர்சன குணவர்தன. தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக் குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராய்ச்சி. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலை திட்டத்தின் ஊடகப்பகுப்பாய்வாளர் சதுரங்க ஹபு ஆராய்ச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பத்திரிகை. வானொலி. டிவி நிறுவனங்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் இச்செயலமர்வில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.