இலங்கையில் பாடசாலைகளை சுற்றி போதைப்பொருள் வியாபாரம் : சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைது!

இலங்கையின் பாடசாலைகளை சுற்றி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 571 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளைச் சுற்றி போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 4,983 பாடசாலைகளில் 4,876 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம், போதைப்பொருள் உள்ளதாக இனங்காணப்பட்ட ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் அந்தந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர் சமூகத்தின் பங்களிப்புடன் 5,133 குழுக்கள் உருவாக்கப்பட்டன.
குறித்த குழுவினர் அளித்த அறிக்கையின்படி, 4876 பள்ளிகள் தொடர்பாக போதைப்பொருள் அபாயம் ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)