கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்!! பலர் காயம்

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பத்து கைதிகளும் இராணுவ சிப்பாய் ஒருவரும் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறைகள் மற்றும் பல இடங்களில் கைதிகள் சேதம் விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மற்றும் கம்பங்கள், மோதலை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கம்புகள் மற்றும் போதைப்பொருள் கையிருப்பு போன்றவற்றை கைப்பற்றியுள்ளதாக வெலிகந்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(Visited 20 times, 1 visits today)