கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை – அத்துரலியே ரதன தேரர்

அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அபே ஜன பல கட்சியானது சமன் பெரேராவின் குடும்ப உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றதுடன், அக்கட்சியில் எவருடனும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அத்துரலியே ரதன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமன் பெரேராவின் மரணத்தின் பின்னர் கட்சியின் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்கப் போவது என்பது தொடர்பில் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் ரதன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)